tamilnadu

img

வளர்ச்சி இல்லை அதனால் வாக்கும் இல்லை - உ.பி. இடைத்தேர்தலை புறக்கணித்த மக்கள் 

உத்திரபிரதேசம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ருதாவ் முஸ்தகில் கிராம மக்கள் எங்கள் பகுதியில்  இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கிராமத்தின் வளர்ச்சி என்பதே கிடையாது. இதனால், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். 

அந்த மாவட்டத்தில், துன்ட்லா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களாகும். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஏழு சட்ட மன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற சட்டமன்ற தொகுதிகள் கட்டம்பூர், கான் சதாத், புலந்த்ஷாஹர், பங்கர்மாவ், தியோரியா, மற்றும் மல்ஹானி ஆகியவையாகும்.

கிராமப்பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கும்,, பிற பொது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாததால் அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கையை கையாண்டுள்ளனர். அந்த பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக அனைத்து கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆனால், யாரும் கிராமத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. இதனால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு வளர்ச்சி இல்லை அதனால், வாக்கும் இல்லை என கூறியுள்ளனர். 

இன்று நடைபெற்று வரும் உத்திரபிரதேசத்தில் 7 சட்ட மன்ற இடைத் தேர்தல்களில் மதியம் 1 மணி நிலவரப்படி 30.41 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த கிராமத்தை போலவே பல கிராமங்கள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.